15 வயது சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்: குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தேரர்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Child Abuse
By Shalini Balachandran May 13, 2026 06:04 AM GMT
Report

சிறுமி ஒருவரைத் தகாத முறைக்கு உட்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் மறுத்துள்ளார்.

அதேவேளை, சட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகச் சந்தேகநபரான தேரருக்கு எதிராகப் புதிய விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பிக்க அனுராதபுரம் பிரதம நீதவான் நேற்று (12-05-2026) மறுத்துள்ளார்.

அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

144 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு - ஆட்சியை தக்கவைத்தார் முதலமைச்சர் விஜய்

பாரதூரமான குற்றச்சாட்டு

இதன்போது சந்தேகநபரான தேரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளைத் தனது கட்சிக்காரர் வன்மையாக மறுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

15 வயது சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்: குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தேரர் | Sri Lankan Monk Abuse Little Girl Case Statement

அத்தோடு இதன்போது கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற இலக்கம் எட்டினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் கீழ் தற்போது விளக்கமறியலில் உள்ள சந்தேகநபரான தேரர், உடல்நலக் குறைவு காரணமாக அனுராதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை எனச் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட முறையான விளக்கமறியல் உத்தரவு அனுராதபுரம் நீதிமன்றத்திற்குக் கிடைக்கவில்லை என்றும் எனவே சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் புதிய விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பிக்கத் தனக்குச் சட்ட அதிகாரம் இல்லை என்றும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் 51 வது மாநிலமாக வெனிசுலா : ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்

அமெரிக்காவின் 51 வது மாநிலமாக வெனிசுலா : ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்

தனியார் மருத்துவமனை

இதனடிப்படையில் வழக்கை மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணை தொடர்பில் மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

15 வயது சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்: குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தேரர் | Sri Lankan Monk Abuse Little Girl Case Statement

சந்தேகநபரான தேரர் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய நிலையில் இல்லை என்றும் அவருக்கு மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் தேவை என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

15 வயது சிறுமியைத் தவறான முறைக்கு உட்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அனுராதபுரம் பிரதம நீதவான் பிறப்பித்த கைது உத்தரவைத் தொடர்ந்து மே எட்டாம் திகதி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வைத்து தேரர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தாக்கப்பட்டால் பதிலடி: மத்திய கிழக்கில் கொதிநிலை - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

தாக்கப்பட்டால் பதிலடி: மத்திய கிழக்கில் கொதிநிலை - அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019