புலிகளின் தங்க பரபரப்பு! தங்கத்துடன் சென்ற ஹெலி பைலட் கதி?
ரணில் ஆட்சியில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனும் சட்டத்தரணி ரகிதவும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவும் அதிரடியாக கைது செய்யப்பட்டாலும் இந்த கைதுக்கு பின்னால் வெளிப்பட்ட பரபப்புகள் அடங்கவில்லை.
மகிந்த ராஜபக்சவின் கடைக்குட்டியான ரோஹித ராஜபக்சவும் இன்று மீண்டும் ஒரு முறை சிறிலங்கா சிஐடிக்கு இழுத்தெடுக்கப்பட்டு மிரிஹானாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் அவர் செய்த தில்லாலங்கடி முதலீடுகள் தொடர்பாக 4 மணிநேரமாக வறுத்தெடுக்கபட்ட நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்றன.
இந்த கைதுகள் மற்றும் ரோகித வாக்குமூலங்கள் இடம்பெற்ற சமகாலத்தில் அமெரிக்காவுடன் இந்தவாரம் புதிய டீல்களை போட்ட அநுர குமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்துக்கு சென்று பாதாள அச்சுறுத்தலைக் கையாள்வது தொடர்பான புதிய திட்டங்களை எடுத்துவிட்டார்.
இதே சமகாலத்தில் புலிகளின் தங்கம் சிக்கியுள்ள இடங்கள் குறித்த விடயம் மீண்டும் பரபரப்பாக அதிரும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 10 மணி நேரம் முன்