பயங்கரமான கனவில் இருந்து வெளிவந்த அநுர! எதிர்கட்சி தலைவர் சாடல்
லசந்த விக்ரமதுங்க மற்றும் தாஜுதீன் ஆகியோரின் கொலைகள் உட்பட, கூறப்படும் கொலைகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு ஆதரவாக தாங்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
தாங்கள் அதை எந்த வகையிலும் எதிர்க்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான முன்மொழிவு குறித்து கருத்து தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) நாடாளுமன்றத்தில் வெளியிட்ட சிறப்பு அறிக்கையைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச இந்த அறிக்கையை வெளியிட்டார்.
யார் வேண்டாம் என்கிறார்கள்
"யார் வேண்டாம் என்கிறார்கள், யார் அவர்களை எதிர்க்கிறார்கள்? எங்களில் யாரும் அவர்களை எதிர்க்கவில்லை.

இந்த ஜனாதிபதி ஒரு பயங்கரமான கனவிலிருந்து வெளியே வந்து பேசுகிறார். நாங்கள் அவர்களை ஒருபோதும் எதிர்த்ததில்லை," என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 மணி நேரம் முன்