இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன தமது நாட்டிற்கு அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
சீன பிரதமர் லீ கியாங்கின் அழைப்பின் பேரில், சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன மார்ச் 25 முதல் 30 வரை சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தினேஸ் குணவர்தன சீனா விஜயம்
குணவர்தன, சீனத் தலைவர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து, "சீனா-இலங்கை பாரம்பரிய நட்புறவு தொடர்வது குறித்த ஆழமான கருத்துப் பரிமாற்றம்"தொடர்பில் பேச்சு நடத்துவார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் கூறுகையில், “சீனா-இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.” இது "உயர் தரத்துடன் பட்டுப்பாதை திட்டத்தை கூட்டாக கட்டமைக்கவும், பரிமாற்றங்களை விரிவுபடுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும்", உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
சீன அதிபரின் திட்டம்
இது சீனாவின் செல்வாக்கை வெளிநாடுகளில் விரிவுபடுத்துவதற்கான அதிபர் ஜியின் முயற்சியின் மைய தூணாக இருக்கும் ஒரு பரந்த உள்கட்டமைப்பு திட்டத்தைக் குறிக்கிறது.
பெய்ஜிங்குடன் நெருங்கிய உறவுகளைக் கொண்ட மற்றொரு தெற்காசிய நாடான நேபாளத்தின் வெளியுறவு அமைச்சர் வருகை தரவுள்ளார் என்றும் சீனா வெள்ளிக்கிழமை அறிவித்தது. "நாராயண் காஜி ஷ்ரேஸ்தா மார்ச் 25 முதல் ஏப்ரல் 1 வரை சீனாவுக்கு அதிகாரபூர்வ விஜயம் செய்வார்" என்று லின் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |