இலங்கைத் தமிழ் அகதிகளின் சோகமான வாழ்க்கை
sri lanka
people
refugee
By Shalini
திருவாதவூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கையர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதையடுத்து, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நேற்று இலங்கைப் பெண்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
“இந்த முகாமில் 31 ஆண்டுகளாக வசிக்கிறோம். தலா 10 அடி நீளம், அகலம், உயரமுள்ள சிறிய வீட்டில் 5-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். தொடர்ச்சியாக 30 வீடுகள் உள்ளன.
கழிப்பிட வசதி இல்லாததால் சிரமப்படுகிறோம்.
மழைக்காலத்தில் சாக்கடை நீர் வீட்டுக்குள் புகுதல், மேற்கூரை யில் இருந்து மழைநீர் ஒழுகு தலால் சிரமப்படுகிறோம். மாவட்ட நிர்வாகம் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்” என்றனர்.