ரஷ்ய, உக்ரைன் போருக்கு செல்லும் சிறிலங்கா படையினர் : பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
ரஷ்யா - உக்ரைன் போருக்காக ஓய்வு பெற்ற சிறிலங்கா இராணுவ வீரர்களை சட்டவிரோதமான வழிகளில் ஆள் கடத்தல் தொடர்பான தகவல்களைப் பெற பாதுகாப்பு அமைச்சினால் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence)அறிவித்துள்ளது.
அதன்படி, பல்வேறு வழிகளில் ரஷ்யா-உக்ரைன் போருக்குப் புறப்பட்ட முப்படைகளின் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள், அவர்கள் புறப்படும் திகதிகள், அவர்களை ஒருங்கிணைத்த நபர்கள், நிறுவனங்கள், தொலைபேசி எண்கள், அமைச்சகத்தின் சிறப்புத் தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் 0112441146 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை கேட்டக்கொண்டுள்ளார்.
மனித கடத்தலில் ஈடுபட்ட நபர்கள்
மேலும், இந்த மனித கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் அல்லது அதற்கு ஆதரவான நபர்கள் அல்லது பிறர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால், அதே விவரங்கள் மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கும் வழங்கப்படமுடியும்
இலங்கைப் பிரஜைகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக
இது இலங்கைப் பிரஜைகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடு என்பதனால், அனைவரும் விசேட கவனம் செலுத்தி, இதற்கான தகவல்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |