ரஷ்யா செல்ல உள்ள பிரதிநிதிகள் குழு: வெளியான காரணம்
ரஷ்ய (Russia) - உக்ரைன் (Ukraine) போரில் ஈடுபட்ட முன்னாள் சிறிலங்கா ராணுவ வீரர்கள் குறித்து விவாதிக்க சிறிலங்கா பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் ரஷ்யா செல்ல உள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய (Taraka Balasuriya) மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதிநிதிகள் ரஷ்யாவுக்கு விஜயம்
ஜூன் 5-7 ஆம் திகதிக்கு இடையில் நாட்டின் பிரதிநிதிகள் ரஷ்யாவுக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ரஷ்ய உக்ரைன் போரில் ஈடுபட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தினர் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக பாதுகாப்பு அமைச்சு விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியதாகவும், அந்த இலக்கத்திற்கு இதுவரை 455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி 16 சிறிலங்காவை சேர்ந்தவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 26 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |