விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கை பெண் சென்னையில் கைது
arrest
chennai
woman
srilankan
By Sumithiran
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணொருவர், சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கைதானவர் இலங்கை பெண் ஆவார். இவர், விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியது என்ஐஏ விசாரணையில் அம்பலமாகியுள்ளது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கையை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கோ கைது செய்யப்பட்டார்.
2018ல் சென்னை வந்த மேரி அண்ணாநகரில் தங்கி அதே முகவரியில் ரேஷன் அட்டை உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
