இஸ்ரேல் போரில் உயிரிழந்த பெண்ணின் சடலம் இலங்கைக்கு..
இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இலங்கை பெண் அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர், இதனை தொடர்ந்து இஸ்ரேல் போர் பிரகடனம் அறிவித்து இருதரப்பிற்கும் இடையில் பாரிய யுத்தம் இடம்பெற்று வருகிறது.
இந்தநிலையில், குறித்த யுத்தத்தில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் இன்று (28) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஹமாஸ் தாக்குதல்
அதேவேளை, சடலத்தை பெற்றுக் கொள்வதற்காக உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உறவினர்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்ததுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழுவும் இதில் கலந்து கொண்டுள்ளது.
உயிரிழந்த அனுலா ரத்நாயக்க ஹமாஸ் தாக்குதலின் போது இஸ்ரேலிய பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
