ஓமன் சுரக்ஸா இல்லத்திலிருந்து நாடு திரும்பிய பெண் தப்பியோட்டம்
ஓமானில் இருந்து இலங்கை திரும்பிய 14 பெண்களில் ஒருவர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓமானில் பணிக்கு புறப்பட்டு ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு இன்று (16) இலங்கை வந்த 14 பெண்களில் ஒருவர் விமான நிலையத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓமான் சுரக்ஸா இல்லத்தில் இருந்து இன்று வந்த 14 பெண்கள் உட்பட இதுவரை 32 பெண்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக முகவர் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
அந்த 14 பெண்களில் 7 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றுள்ளதாகவும் எஞ்சிய 7 பேர் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றவர்கள் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலையீட்டில் இவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர்கள் மீதும், அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தவர்கள் மீதும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 9 மணி நேரம் முன்
