இலங்கை இளைஞன் வெளிநாடொன்றில் கொலை : கதறும் பெற்றோர்
இலங்கைகையைச் சேர்ந்த இளைஞன் கொடூரமான முறையில் ஜப்பான் நாட்டில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாத்தறையை சேர்ந்த 26 வயதான ஷாலிந்த என்ற இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வறுமையில் வாழ்ந்துவரும் பெற்றோர்
கடந்த மாதம் 15ஆம் திகதி இலங்கையை சேர்ந்த குழுவொன்றுடன் ஏற்பட்ட மோதலில் இவர் கடுமையான தாக்குதலுக்கு இலக்கானார். படுகாயமடைந்த நிலையில் ஜப்பானில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

வறுமைநிலையில் வாழ்ந்துவரும் பெற்றோர் அதிலிருந்து மீளும் வகையில் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பணத்தை திரட்டி மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        