விஜயகாந்த் உடல் நிலை மோசமானதா..! வெளியானது அறிவிப்பு
பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் உடல் நிலை தொடர்பாக வெளிவரும் தகவல்களை எவரும் நம்ப வேண்டாம் என தேமுதிக அறிவித்துள்ளது.
விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
மூச்சு விடுவதில் லேசான சிரமம்
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜயகாந்துக்கு மூச்சு விடுவதில் லேசான சிரமம் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் அவ்வப்போது அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

வதந்திகளை நம்பவேண்டாம்
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்.

செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும்வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        