வெளிநாடொன்றில் பெண்ணை காப்பாற்றிய இலங்கை இளைஞன் : குவியும் பாராட்டுகள்
அவுஸ்திரேலியாவில் பெரும் பணமோசடியில் சிக்கவிருந்த பெண்ணை இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காப்பாற்றியதை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சமுக ஊடகங்கள் மூலம் சந்தித்த நபர் ஒருவருக்கு பணம் அனுப்ப 60 வயதான மெல்போர்னில் வசிக்கும் பெண் ஒருவர் வங்கிக்கு சென்ற நிலையிலேயே அது ஒரு மோசடியான செயற்பாடு என தெரியவந்த நிலையில் இலங்கை இளைஞன் அவரை காப்பாற்றியுள்ளார்.
காதலன் என கூறிய நபருக்கு பணம் அனுப்ப
குறித்த பெண்மணி தனது காதலன் என கூறிய நபருக்கு பணம் அனுப்ப அவுஸ்திரேலிய தேசிய வங்கியின் (NAB) மெல்போர்ன் கிளைக்கு சென்றுள்ளார். எனினும் குறித்த வங்கியின் ஆலோசகராக இருந்த இலங்கையைச் சேர்ந்த டிலான பத்திரண என்பவரிடம் அந்த பெண் வழங்கிய தகவல் தொடர்பில் சந்தேகம் நிலவியதால் மேலதிக விசாரணை நடத்தப்பட்டது.
இலங்கை இளைஞனுக்கு பாராட்டுகள்
இந்த பணம் அனுப்பும் விடயத்தில் பெறுநரின் குடும்பபெயர் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் அவர் மோசடியான நபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியை கண்டுபிடித்த இலங்கை இளைஞனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |