இஸ்ரேலில் உள்ள இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு தூதுவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இஸ்ரேலில் மக்களின் வாழ்க்கை வழமையாக இயங்கி வருவதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பாக உள்ள இலங்கையர்
சுமார் 11,500 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகிறார்கள், அவர்களில் 70 வீதமானவர்கள் வீட்டில் வேலை செய்கிறார்கள். சுமார் 15 சதவீதம் பேர் விவசாயம், பணியிடங்கள் மற்றும் மீதமுள்ளவர்கள் கட்டுமானம் மற்றும் பிற துறைகளில் வேலை செய்கிறார்கள் என்று தூதரகம் கூறுகிறது.
காஸா பகுதியை அண்மித்துள்ள பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார சுட்டிக்காட்டினார்.
இஸ்ரேலிய பிரஜைகள் இடம்பெயர்வு
இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் லெபனான் எல்லையில் எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெறுவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருவதால், அந்தப் பிராந்தியத்திலுள்ள இஸ்ரேலிய பிரஜைகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், குடும்பங்களுடன் இருந்த இலங்கையர்களும் புதிய இடங்களுக்குச் சென்றுள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
அதனால் அவர்களின் பாதுகாப்பில் எந்த பிரச்சனையும் இல்லை. எவ்வாறாயினும், சில விமானங்கள், விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதால் இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு வரவிருந்த பலரின் விமானங்கள் தாமதமாகலாம் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |