உக்ரைன்-ரஷ்ய போர்: சுமார் 17 சிறிலங்கா படையினர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்!
உக்ரைன் (Ukraine) உடனான போரில் ரஷ்யாவுக்கு (Russia) ஆதரவாக போர் புரிந்த 17 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆள்கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணைக்களுக்கமைய இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
ஓய்வுபெற்ற சிறிலங்கா (Sri Lanka) படையினர் அதிக சம்பளத்துக்காக ரஷ்ய இராணுவத்தில் தொடர்ந்தும் இணைந்து வருகின்ற நிலையில், மேலும் சிலர் பணத்துக்காக ரஷ்ய கூலிப்படைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றனர்.
ரஷ்ய இராணுவத்தில் இணையும் இலங்கையர்கள்
இந்த நிலையில், ரஷ்ய இராணுவத்தில் இணைந்த மேலும் இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதிக்கு பின்னர் குறித்த இரண்டு இலங்கையர்களுடான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை எனவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான அசங்க சந்தன (Asanka Chandana) எனும் நபர் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார்.
காணாமல் போன இலங்கையர்கள்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர் புரிந்த அசங்க சந்தன, கடந்த மார்ச் மாதம் 229 ஆம் திகதிக்கு பின்னர் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஓய்வுபெற்ற கமாண்டோ அதிகாரியான பிரதீப் சந்தன எனும் நபரும் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி ரஷ்யாவுக்கு சென்றிருந்த நிலையில், அவர் கடைசியான மார்ச் மாதம் 29 ஆம் திகதி தங்களை தொடர்பு கொண்டிருந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, சிறிலங்கா இராணுவத்தினரை ரஷ்ய கூலிப்படைகளுக்கு விற்கும் மோசடியின் மூலம் பணம் வசூலிக்கும் கும்பல், ஒவ்வொரு இராணுவ வீரரிடம் இருந்தும் 25 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |