வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இலங்கையை விட்டு வெளியேறுவோர் அதிகரிப்பு!
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக கடந்த நான்கு வருடங்களில் இலங்கையில் இருந்து அதிகளவானோர் வெளியேறிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 7 இலட்சத்து 32 ஆயிரம் பேர்இலங்கையிலிருந்து கடந்த நான்கு வருடங்களில் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தகவலறியும் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் குருநாகல் கிளையில் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களுக்கு இணங்க, இது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இந்த தகவல்களுக்கு இணங்க, வீட்டுப்பணிப்பெண்கள், தொழிலாளர்கள், மின்சார கைத்தொழில் துறை வேலைவாய்ப்புக்கள் மற்றும் சாரதி உள்ளிட்ட ஏனைய தொழில்களுக்காக இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 15 பிரதேச அலுவலகங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுகின்றன.
இந்த அலுவலகங்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொண்டே சட்ட ரீதியாக மேற்படி 7 இலட்சத்து 32 ஆயிரம் பேரும் வெளிநாடு சென்றுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |