அதிபர் தேர்தலில் களமிறங்கவுள்ள ரொஷான் ரணசிங்க
இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டால் தாம் நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் ஓமல்பே சோபித தேரரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, ரொஷான் ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியலில் தாம் தொடர்ந்தும் தனித்து செயல்படுவதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் திட்டங்கள்
அத்துடன், தம்மால் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் திட்டங்களை முன்வைக்கும் தரப்பினருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் எதிர்காலத்தில் யோசிக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமக்கு எதிர்க்கட்சியுடன் இணைய வேண்டிய தேவை இல்லை எனவும் சிறிலங்காவின் முன்னாள் அதிபரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்காக நிறைவேற்றும் பணிகளை மாத்திரம் தற்போது தாம் முன்னெடுத்து வருவதாகவும் ரொஷான் ரணசிங்க கூறியுள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகுவது தொடர்பில் ரொஷான் ரணசிங்க மேற்கொண்டது ஒரு சிறந்த தீர்மானமென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |