தாய்நாட்டுக்கு தங்கப்பதக்கம்: சாதனை படைத்த இலங்கையர்கள்
தாய்வான் பகிரங்க தடகளப் போட்டித்தொடரில் முதல் நாளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இருவேறு போட்டிகளில் பங்குபற்றிய தருஷி கருணாரத்ன மற்றும் அருண தர்ஷனா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
குறித்த தொடரானது நேற்றையதினம்(1) ஆரம்பமானது பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் தருஷி 52.48 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.
ஆரம்பப் போட்டியில் தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா ராமநாயக்க ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
இலங்கை வீராங்னைகள்
அதன்படி, மற்றொரு வீராங்கனையான நடிஷா ராமநாயக்க 53.93 வினாடிகளில் பந்தயத்தூரத்தை கடந்து நான்காவது இடத்தை பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீராங்கனை கயந்திகா அபேரத்ன, 4.24.66 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷன 47.49 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, இன்று (02) இடம்பெறவுள்ள ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருணாவும், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷியும் பங்குபற்றவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |