T20 உலகக்கோப்பை: கனடாவை வீழ்த்திய அமெரிக்க அணி
புதிய இணைப்பு
ஒன்பதாவது உலகக்கிண்ண t20 ஆட்டத்தின் முதல் போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய முதல் நாள் ஆட்டம் அமெரிக்காவில் (America) உள்ள டல்லாஸ் நகரில் இடம்பெற்றதோடு நாணயசுழட்சியில் வென்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கனடா (canada) அணி வீரர்கள் அதிரடியாக ஆடி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.
கனடா அணி சார்பாக நவ்நீத் தலிவால் 61 ஓட்டங்களையும் , நிக்கோலஸ் கிர்டன் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
அணியை வெற்றிப்பாதை
ஆட்டத்தின் இறுதி 4 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் மொவ்வா 16 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதனை தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்க அணி 17.4 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
அமெரிக்க அணி சார்பாக ஆண்டிரிஸ் கவுஸ் 46 பந்துகளில் 65 ஓட்டங்களையும் , ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 94 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு ஈட்டுச்சென்றனர்.
முதலாம் இணைப்பு
அமெரிக்காவில் இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகியுள்ளது.
இந்த தொடரின் முதலாது போட்டி அமெரிக்கா (America ) மற்றும் கனடா (Canada) ஆகிய அணிகளுக்கு இடையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் Dallas இல் இன்று (02) இடம்பெற்று வருகிறது.
நாணய சுழற்சி
அதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அமெரிக்கா முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் கனடா அணி சற்றுமுன்னர் வரை 04 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழிப்பின்றி 40 ஓட்டங்களை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |