கோவிட்-19 தடுப்பூசிகளின் கையிருப்பு ஆகஸ்ட் 24 அன்று காலாவதியாகிறது
சிறிலங்காவில் கிடைக்கும் கோவிட்-19 தடுப்பூசிகளின் இருப்பு ஒகஸ்ட் 24 அன்று காலாவதியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது சினோபார்ம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கின்றது என்று கோவிட்-19 ஒருங்கிணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
எனவே, தடுப்பூசி போடவுள்ளவர்களுக்கு இன்னும் சிறிது காலம்தான் மீதம் உள்ளது எனவும் யாராவது தடுப்பூசி போட வேண்டிய தேவை இருந்தால், அவர்கள் அருகில் உள்ள சுகாதார மருத்துவ அலுவலகத்தை நாடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போலி தடுப்பூசி சான்றிதழ்

இதற்கிடையில், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பலர் தங்களுடைய சர்வதேச பயண தேவைகளுக்காக சுகாதார அதிகாரிகளிடம் போலி தடுப்பூசி சான்றிதழ்களை கோரியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதுவரை கோவிட்-19 க்கு எதிராக ஊக்கமளிக்கும் தடுப்பூசிகள் மூலம் தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.