2050 ஆம் ஆண்டில் உயரப்போகும் இலங்கையின் மக்கள் தொகை
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Sumithiran
இலங்கையின்மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டில் சுமார் 25 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே சுகாதார அமைச்சின் செயலாளர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
நான்கு பொதுமக்களில் ஒருவர் முதியவர்
இதேவேளை 2041 ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் நான்கு பொதுமக்களில் ஒருவர் முதியவர்களாக இருப்பார்கள் என்று கணிப்புகள் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் பிறப்பு வீதம் குறைவடைந்து வருவதாக அண்மைக்காலமாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்வரும் 2050 ஆம் ஆண்டில் இலங்கையில் சனத்தொகையின் அளவு உயரவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
