பாரிய மின்னல் தாக்கம் : மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் குருநாகல், கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பாரிய மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அவதானம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) முன்னெச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
குறித்த அறிவித்த இன்று (27.03.2025) மதியம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலின் படி மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் குருநாகல், கண்டி (Kandy), நுவரெலியா (Nuwara Eliya) மற்றும் அம்பாறை பகுதிகளில் மழையுடன் பாரிய மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் அதிகமாக காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய மின்னல் தாக்கம்
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு (2025 மார்ச் 27 ஆம் திகதி பிற்பகல் 02.00 மணிக்கு வெளியிடப்பட்டது.)
மழை நிலைமை | புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. |
காற்று | நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. |
கடல் நிலை | நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
