சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் நாளை ஆரம்பம்
2023 – 2024 ஆம் ஆண்டிற்கான சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் நாளை (26) உந்துவப் பொஹோ அன்று ஆரம்பமாகும் என சிவனொளிபாத மலை நிலையத் தலைவர் சப்ரகமுவ மாகாண பிரதம சங்கத் தலைவர் பெங்கமுவே தம்மதின்ன நஹிமியோ தெரிவித்தார்.
பெல்மதுல்ல கல்பொத்தாவெல ஸ்ரீ பாத ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சததுக கலசம், சமணதேவர் சிலை, தெய்வ ஆபரணங்கள் மற்றும் காணிக்கைகள் இன்று அதிகாலை இரத்தினபுரி பாலபத்தல, எரத்ன, அவிசாவளை, ஹட்டன், பலாங்கொடை, பக்வந்தலாவ ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளதாக ஸ்ரீ பாதஸ்தானத்தின் தலைவர் தெரிவித்தார்.
ஸ்ரீ பாத முற்றத்திற்கு கொணடு வரப்படும்
நாளை (26) சததுக கலசம், சமணதேவர் சிலை, குலதெய்வ ஆபரணங்கள் மற்றும் பிரசாதங்கள் ஸ்ரீ பாத முற்றத்திற்கு கொண்டு வரப்படும்.
இதன்பின்னர் ஸ்ரீ பாத பத்மிய வழிபாடுகள் செய்யப்பட்டு பல சமய வழிபாடுகள் நடத்தப்பட்டு, சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் தொடங்கும் என தெரிவித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
இம்முறை, சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்கள், ஸ்ரீ பாதஸ்தானத்தை புனிதமான இடமாக கருதி, சுற்றுச்சூழலை பாதுகாத்து, ஸ்ரீ பாதஸ்தானத்தில் கருணை காட்டுமாறு பக்தர்களிடம் கேட்டுக் கொண்டனர்.
இதேவேளை அனுமதியின்றி பருவகாலம் இல்லாத காலப்பகுதியில் சிவனொளிபாத மலைக்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |