முருகன், ரொபட் பயஸ் ஆகியோரையாவது உயிருடன் விடுதலை செய்யுங்கள்: சிறீதரன் கோரிக்கை
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன், ரொபட் பயஸ் உள்ளிட்டவர்களையாவது உயிருடன் விடுதலை செய்து அவர்களுடைய குடும்பத்தோடு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய (6) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், தான் இந்த கோரிக்கையை தமிழகத்தின் முதலமைச்சர், இந்தியப் பிரதமர் மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு பின்னர் விடுதலை ஆகியும் கூட வீடு வர முடியாமல் சில நாட்களுக்கு முன்னர் மரணத்தை தழுவிக் கொண்ட சாந்தனுக்கும் நான் இந்த இடத்திலே எங்களுடைய அஞ்சலிகளை செய்து கொள்கிறேன்.
தன்னுடைய தாயைப் பார்க்க, உறவினர்களை பார்க்க தன்னுடைய ஊரை பார்க்க துடியாய் துடித்த 20 வயதில் புறப்பட்ட இளைஞன் 53 வயதைக் கடந்து சடலமாக வரவேண்டிய மிகப்பெரிய நெருக்கடியும் ஒரு மன உளைச்சலும் இந்த மண்ணிலே ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய ஆதங்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சிவஞானம் சிறீதரன் மேலும் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காணலாம்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |