சிறீதரனின் வெற்றியை கொண்டாடிய தொண்டர்கள்
TNA
M. A. Sumanthiran
Mavai Senathirajah
S. Sritharan
ITAK
By Shadhu Shanker
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது உறுப்பினர்கள் வெற்றியை கூச்சலிட்டு கொண்டாடி வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழரசுக் கட்சியின் தலைமைக்கான தேர்தல் இன்று(21)திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நடைபெற்ற வாக்கெடுப்பில் 184 வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.தேர்தலில் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் 137வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சிறீதரனின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டு ஆரவாரமிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் இது தமிழ்த் தேசியத்தின் வெற்றி எனவும் அவர்கள் கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்