ரணில் - அனுரவிற்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் : கடுமையாக விமர்சித்த சஜித்
மக்களின் துயரங்களை சந்தைப்படுத்தி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இரகசிய கொடுக்கல் வாங்கல் மூலம் முன்னேற முயற்சி செய்வதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 42 ஆவது வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்றைய தினம் (09) மாவத்தகம (Mawathagama) நகரில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொடுக்கல் வாங்கல்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சிகள் இரண்டாக இருந்தாலும் ரணில் விக்ரமசிங்கமும் அனுரகுமார திஸாநாயக்கவும் ஒன்றாக இணைந்து இரகசிய கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றனர்.
இவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தன்னுடைய வெற்றியை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொறுப்புக்கள்
சஜித் பிரேமதாச ஆகிய எனக்கு பொறுப்புக்கள் கிடைக்கப்பெற்றால் மக்களுடைய துன்பமும் வேதனையும் இல்லாது செய்யப்படும் என்பதால் மக்களின் துன்பத்தை சந்தைப்படுத்துகின்ற ரணிலும் அனுரவும் அதற்கு விருப்பமில்லை.
தற்பொழுது ரணில் மற்றும் அனுர கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஜனாதிபதியே அவரது வாயால் சொல்லியிருக்கின்றார்.
ஜனாதிபதி தோல்வி அடைவார் என்பதால் அனுரகுமாரவுக்கு வாக்களிக்குமாறு கூறியிருக்கிறார் அத்தோடு அனுரகுமார வடக்கிற்குச் சென்று தெற்கில் உள்ளவர்கள் அவருக்கு வாக்களிப்பதால் வடக்கிலும் கட்டாயம் வாக்களிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார் இது வெறும் பகல் கனவாகும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |