ரணில் - அநுர டீல் செய்கின்ற அரசியல் சூழ்ச்சிக்காரர்கள் : கடுமையாக சாடிய சஜித்
அநுர (Anura Kumara Dissanayake) மற்றும் ரணில் (Ranil Wickremesinghe) டீல் போட்டாலும் எமது டீல் மக்களுடனே இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நீர்கொழும்பில் (Negombo) நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்பொழுது நாட்டு மக்கள் தெளிவான தீர்மானம் ஒன்றை எடுத்திருப்பார்கள்.
அரசியல் ஒப்பந்தம்
ரணில் விக்கிரமசிங்கவும் அநுரகுமார திசாநாயக்கவும் அரசியல் ஒப்பந்தம் ஒன்றின் ஊடாக ஒரு பக்கமாக இருக்கின்றார்கள்.
ஐக்கிய மக்கள் சக்திதான் பொதுமக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கின்றது அத்தோடு டீல் செய்கின்ற அரசியல் சூழ்ச்சிக்காரர்களின் பக்கம் செல்வதா? அல்லது வெளிப்படையாக நின்று போராடி பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்று கொடுக்கின்றவர்களின் பக்கம் இருப்பதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
மக்களை கைவிட்டு விட்டு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் அரசியல் டீல் செய்து கொள்கின்ற கலாச்சாரத்தை நிராகரித்து பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குகின்ற சமூக டீல் ஒன்றுக்கே சென்றுள்ளோம்.
வர்த்தமானி அறிவித்தல்
ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டதைப் போன்ற செயற்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்போம்.
முத்துராஜாவெல காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வந்த போது அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டது.
அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பொன்றை பெற்றுக் கொள்வதற்கு ஐக்கிய சட்டத்தரணிகள் குழுவுக்கு முடியுமாக இருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |