படகு கவிழ்ந்து விபத்து..! காணாமல் போன இரண்டு சிறுமிகளும் சடலமாக மீட்பு
சூரியவெவ மஹாவலிகடார வாவியில் படகு கவிழ்ந்து காணாமல் போன ஏனைய இரண்டு சிறுமிகளின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில் 10 வயதுடைய சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் 16 மற்றும் 18 வயதுடைய ஏனைய இரு சிறுமிகளின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகில் 8 பேர் பயணித்திருந்த நிலையில் அதில் 5 பேர் காப்பாற்றப்பட்டிருந்தனர்.
தேடும் பணி

சிறுமிகளையும் தேடும் பணி தீவிரமாக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை இருவரினது சடலங்களும் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் 08 பேர் பயணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
விபத்துக்கு உள்ளானவர்கள் குருநாகல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் உறவினர் வீடு ஒன்றுக்கு வந்த
நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.