போராடும் தலைவர்களை வேட்டையாடும் முயற்சி குறித்து எச்சரிக்கை!

arrest education protest sri Lanka
By Kalaimathy Aug 10, 2021 04:29 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

கல்வியை இராணுவமயமாக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் முன்னணி தலைவர்களை சிறையில் அடைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச மற்றும் தனியார் துறைகளின் பல முன்னணி தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

ஓகஸ்ட் 3ஆம் திகதி நாாடாளுமன்றத்திற்கு அருகில் அருகில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் ஏற்கனவே சட்டவிரோதமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

"தொழிலாளர் போராட்ட நிலையத்தின் சமீர கொஸ்வத்த, கோஷிலா, அனைத்துத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று திரும்பிக்கொண்டிருந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்."

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் அமில சந்தீப ஆகியோர் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சிவில் உடையில் வந்த குழு மற்றும் ஒரு சீருடை அணிந்த அதிகாரி ஆகியோர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வசந்த முதிலிகேக்கு கைவிலங்கு மாட்டி அழைத்துச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

கடத்தப்பட்டு ஒரு நாள் காணாமல் போன அமில சந்தீப காவலில் இருப்பதை பொலிஸார் பின்னர் வெளிப்படுத்தினர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான அமிந்த லக்மல் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தங்களை பொலிஸ் என அறிமுகப்படுத்திய ஒரு குழு அவரை கடத்த முயன்றுள்ளதோடு, மாணவர்கள் உள்ளிட்டவர்களின் எதிர்ப்பினை அடுத்து தடுக்கப்பட்டதாக, சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

100 வருடங்களுக்கு மேல் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் தலைவரும் பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் தலைவரும் இணை ஏற்பாட்டாளருமான சத்துர சமரசிங்கவிற்கும் பொலிஸாரின் ஒடுக்குமுறை இடம்பெற்று வருவதாக, பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கத் தலைவரை பொலிஸ் உளவாளிகள் பின்தொடர்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. "அவரது வீட்டுக்கு வருகைத்தந்து வீட்டில் இருப்பவர்களை அச்சுறுத்துவதோடு, பணியாற்றும் இடங்களைக் கண்டறிய பொலிஸ் உளவாளிகள் அனுப்பப்படுகின்றார்கள“ என கடந்த 3ஆம் திகதி பேரணியில் உரையாற்றிய சதுர சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக, போராட்டக்காரர்களை கைது செய்து நாட்டு சிறுவர்களின் முழு கல்வியையும் அழிக்க முயல்வதாக, பொது உடைமை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் குற்றம் சாட்டுகிறது. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பல்கலைக்கழக அமைப்பை ஒழுங்குபடுத்தும் பல்கலைக்கழகங்கள் சட்டம் 1978 எண் 16 ஐ இரத்து செய்து, அரசாங்கம் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சிக்கிறது.

தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பொதுமக்கள் ஏற்கனவே அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர், கல்வியை இராணுவமயமாக்கும் முயற்சி உட்பட தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, பொதுச் சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த செயல்முறை கருத்து சுதந்திரத்திற்கான ஜனநாயக உரிமைகளுக்கு விழுந்த ஒரு அபாயகரமான அடி எனவும், கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் போராட்டங்களில் ஈடுபடும் மக்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறையை தனது அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம், குறிப்பிட்டுள்ளது. 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025