புதிய இராணுவ பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் வசந்த மாதொல பதவியேற்பு!
srilanka
army
malathola
comander
By Vasanth
புதிய இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் வசந்த மாதொல தனது கடமையினை 14 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
பௌத்த மத அனுஷ்டானங்களுக்கு பின்னர் அவர் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டு தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார். மேஜர் ஜெனரல் வசந்த மாதொல , இந்த புதிய நியமனத்திற்கு முன்பு கொஸ்கமயிலுள்ள விநியோக கட்டளத் தளபதியாக பணியாற்றினார்.
இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி அலுவலக பதவி நிலை அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவச் சிப்பாயினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அவர் கள படைப் பிரிவுகள் மற்றும் ஏனைய இராணுவ நிறுவனங்களில் பல கட்டளை, அறிவுறுத்தல் மற்றும் பதவி நிலை நியமனங்களை வகித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி