இலங்கையில் ‘கருப்பு பூஞ்சை’நோயா?முற்றாக மறுக்கிறது அரசு
இலங்கையில் ‘கருப்பு பூஞ்சை’நோய் கண்டறியப்பட்டது என்று வெளியான தகவலை அரசாங்கம் மறுத்துள்ளது
அம்பாறையில் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது தவறானது என்று முதன்மை சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
அந்த நபர் காசநோய் நோயாளி, அவர் காசநோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றார். அந்த நபருக்கு பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அது கருப்பு பூஞ்சை அல்ல என்று அமைச்சர் தெரிவித்தார்.
நேற்றையதினம் அம்பாறையில் ஒருவருக்கு கருப்பு பூஞ்ஞை நோய் உள்ளமை கண்டறியப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்தியாவில் கொவிட் தொற்றாளர்களுக்கு இடையில் வேகமாக பரவிவரும் கருப்பு பூஞ்சை நோய், இலங்கையர் ஒருவருக்கும் தொற்றியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது என அம்பாறை மாவட்ட தொற்று நோய் விசேட வைத்தியர் வஜிர ராஜபக்ஸ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.