தமிழ்மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள வரவு-செலவுத்திட்டம்! நாடாளுமன்றத்தில் கலையரசன் காட்டம் (காணொளி)
Parliament
People
TNA
SriLanka
Budget 2022
By Chanakyan
வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக பாதுகாப்புக்கு என அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் (Thavarasa kalaiyarasan) தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு குறைந்தளவான நிதி ஒதுக்கப்பட்டு, பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அரசாங்கம் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
பசில் ராஜபக்சவினால் சமர்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் முழுமையான காணொளி,