பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஸ்ரீலங்காவின் சவப்பெட்டி- புதிய திட்டத்தை ஆரம்பித்த “We Are ready” !

sri Lanka out of city conffins
By Kalaimathy Aug 24, 2021 11:25 AM GMT
Report

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளை - கல்கிசை பிரதேசத்தில் பயன்படுத்தப்படும் காட்போட் சவப்பெட்டிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

ஸ்ரீலங்காவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்காக குறித்த காட்போட் சவப்பெட்டிகள் பயன்படுத்தப்படுவதாக தெஹிவளை - கல்கிசை மாநகர சபை தெரிவிக்கின்றது.

ஸ்ரீலங்காவில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த புதிய கண்டுபிடிப்பு முயற்சியை தாம் ஆரம்பித்ததாக தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் முதல்வர் பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.

இந்த காட்போட் சவப்பெட்டி 4,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதோடு, ஸ்ரீலங்காவில் மலிவான மரப்பெட்டியிலான ஒரு சவப்பெட்டி 25,000 முதல் 30,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. இந்த சவப்பெட்டி மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதத்தால் உருவாக்கப்படுவதோடு, குறைந்த மரத்தாலான சவப்பெட்டியின் ஆறில் ஒரு பங்கு செலவில் உருவாக்கப்படுவதாக பிரியந்த சஹபந்து தெரிவித்துள்ளார்.

400 சவப்பெட்டிகளை உருவாக்க சுமார் 250 முதல் 300 மரங்களை வெட்ட வேண்டுமெனவும், ஆகவே அந்த சுற்றுச்சூழல் அழிவை தடுக்கும் வகையில், தான் இந்த விடயத்தை மாநகர சபையின் சுகாதார குழுவிடம் முன்மொழிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் வருமானத்தை இழந்துள்ள மக்கள் விலை உயர்ந்த மர சவப்பெட்டிகளுக்கு செலவிடுவது கடினம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த சவப்பெட்டிகள் ஆரம்பத்தில் பெரும்பாலும் கொரோனா உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டதோடு, பின்னர் இது சுற்றுச்சூழல் தொடர்பில் அக்கறை கொண்டவர்களிடையே மிகவும் பிரபல்யமடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து இதுவரையில் சுமார் 350 காட்போட் சவப்பெட்டிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு பிரதேசத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளை செய்வதற்கு தேவையான சவப்பெட்டியை ”வீ ஆர் ரெடி” என்ற தன்னார்வ அமைப்பு இலவசமாக வழங்கி வருகின்றது. வட்ஸ்அப் குழுமம் ஊடாக இவர்கள் ஒன்றிணைந்து இந்த சமூக சேவையை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு மாநகர சபை மாநகர சபையின் பொது சுகாதார பிரிவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தகவல் திரட்டு மத்திய நிலையத்திற்கும், மரணிப்பவர்களை தகனம் செய்வதற்காகவும் இவர்கள் சவப்பெட்டிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து கடந்த வருடம் இந்த குழுமத்தை ஆரம்பித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களையும் உதவிகளையும் செய்து வந்தனர். இந்த நிலையில், சவப்பெட்டிகளுக்கு பெரும் தொகை பணத்தை செலவிட வேண்டி ஏற்பட்டுள்ளதால், பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் இந்த வேலைத்திட்டத்தை அந்த அமைப்பு செயற்படுத்தி வருகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி