இலங்கையில் பரவும் புதிய கொரோனாவுக்கு இந்தியா காரணம இல்லை!
இந்தியாவில் வியாபித்துள்ள கொரோனா வைரஸின் மாறுபாடு இலங்கையில் பரவி வருகிறது என்பதற்கு இதுவரை எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லை என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பணிப்பாளரான வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார் .
அடுத்த வாரம் இது தொடர்பான முழுமையான பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இது நாட்டில் பரவி வரும் வைரஸின் மாற்றத்தைத் தீர்மானிக்கும். இலங்கைக்குள் இந்தியாவில் பரவியுள்ள வைரஸ் பரவும் வாய்ப்புள்ளது.
இருப்பினும், இது போன்ற சாத்தியக்கூறுகளைக் குறைக்கச் சுகாதார அதிகாரிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
நாட்டில் பரவி வரும் வைரஸ் ஒரு பிறழ்வுக்கு உட்பட்டது மற்றும் ஒரு புதிய திரிபாகக் கூட இருக்கலாம் என அடிப்படை கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன.
புத்தாண்டைத் தொடர்ந்து கொழும்பு, குருநாகல் மற்றும் கண்டியிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் ஒரு திரிபு நிலையை நாங்கள் அவதானித்துள்ளோம். மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றினால் வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க முடியும்.
தற்போது இலங்கையில் பரவி வரும் வைரஸ் வேகமாகப் பரவி வரு வதுடன், அதிக அளவில் பரவக்கூடியதாகவும் காணப்படுகிறது. எனவே, சரி யான ஆராய்ச்சி மூலம் தீர்மானிக்கப்படும் வரை இரண்டு மீற்றர் தூரத்தைப் பேணுமாறு மக்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.