சுகாதார வழிமுறைகளை மீறுபவர்களை தூக்கி ஏற்றும் பொலிஸார்- சிரேஷ்ட பொலிஸ் அத்யட்சகர் விடுத்துள்ள அறிவுறுத்தல்!
சுகாதார சட்டத்தை மீறுபவர்களை தூக்கி ஏற்ற வேண்டாம் என சிரேஷ்ட பொலிஸ் அத்யட்சகர் சுதத் மாரசிங்க பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மூன்றாவது அலை மிகவும் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் சுகாதர நடைமுறைகளை பேணாதவர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சடத்தின் மூலம் தனிமைப்படுத்துமாறு மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்யட்சகர் சுதத் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடு தழுவிய விசேட பாதுகாப்பு நடவடிக்கையின் அடிப்படையில், மட்டக்களப்பு நகர் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொலிஸ் குழு என்ற ரீதியில் முன்னெடுக்கும் கொரோனா சுகாதார பாதுகாப்பு நடவைக்கைகளின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் முக கவசம் அணியாமல் வருபவர்களை கைது செய்வதற்கான முழு அதிகாரம் பொலிஸிற்கு இருக்கின்றது.
அனாலும் பொலிஸாரான உங்களையும் பாதுகாத்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வரும் நபர்களை கைது செய்யும் போது அவர்களையும் பாதுகாக்க வேண்டும் அதற்காக அவர்களை தூக்கி வாகனங்களில் ஏற்ற வேண்டாம்.
சுகாதர சட்டத்தை மதிப்பவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். அது பொலிஸாரின் கடமை. அதே போன்று சுகாதார சட்டத்தை உதாசீனம் செய்பவர்களை கைது செய்ய முடியும்.
அவ்வாறு கைது செய்தவர்களை அவர்கள் செய்த தவறு எது என்பதை அவர்களுக்கு சுட்டி காட்டி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்து தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.