பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கடுமையான அறிவுறுத்தல்!
நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று காரணமாக இன்று இரவு முதல் பஸ் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல செல்ல முடியும் எனவும், பஸ்ஸில் நின்று பயணிக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முச்சக்கர வண்டியில் பயணம் செய்வோர் ஓட்டுநரைத் தவிர மேலதிகமாக இரண்டு பேரை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் அனைத்து மாகாண எல்லைகளிலும் அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் வீதி தடை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை மற்றும் ஓய்வுக்கால பயணங்கள் அனுமதிக்கப்படாது, அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அலுவலக அடையாள அட்டை பயன்படுத்தலாம் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.