எந்த நேரத்திலும் நிலைமை மோசமாகலாம் - நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவித்தல்
srilanka
covid19
corona
death
peoples
By S P Thas
மீண்டும் எந்த நேரத்திலும் மோசமான தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். எனவே மக்கள் பொறுப்புடன் செயற்பட்டால் மாத்திரமே சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்ட காரணத்தினால் கடந்த காலத்தை விடவும் குறிப்பிட்ட அளவு ஆரோக்கியமான பெறுபேறுகள் கிடைத்துள்ளன.
புதிய வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்களின் செயற்பாடுகளில் முழுமையான திருப்தி இல்லை. இலக்கை நோக்கி எம்மால் பயணிக்க முடிந்த போதிலும் இலக்கை தக்கவைக்க முடியவில்லை. அதற்கு மக்களின் செயற்பாடுகளே காரணமாகும்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,