கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் வழங்குங்கள் - அரசாங்கத்திடம் விசேட கோரிக்கை
srilanka
covid19
corona
colombo
wajira abawardane
By S P Thas
கொவிட்-19 பெருந்தொற்றினால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின தவிசாளர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
பெருந்தொற்றுக்கு மத்தியிலும் முன்னரங்க களப் பணியில் ஈடுபட்டு வரும் அரசாங்க ஊழியர்களுக்கு 25 000 ரூபா மேலதிக கொடுப்பனவுடன் 50 லட்ச ரூபா பெறுமதியான காப்புறுதி ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகத் தெரிவித்துள்ளர்.
கொவிட் பெருந்தொற்று நிலைமைகளில் அரசாங்கம் உரிய முறையில் செயற்படத் தவறியதனால் மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் கொவிட் தொடர்பில் உரிய கவனம் செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்