இலங்கையில் இன்றும் 2000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா
srilanka
corona
patient
By Sumithiran
இலங்கையில் மேலும் 2,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 154,089 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,635 பேர் இன்று (22) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126,995 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இவர்களில் 1,132 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்