இலங்கையில் இன்றும் 3000 ஐ கடந்த தொற்றாளர்கள்
srilanka
corona
patient
pcr test
By Sumithiran
இலங்கையில் மேலும் 647 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய தினம் இதுவரையில் 3,538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 158,322 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,828 பேர் இன்று (21) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 125,360 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் இவர்களில் 1,089 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்