மியன்மாருக்கு நன்கொடையாக இலங்கை தேயிலை!(படங்கள்)
Ali Sabry
Myanmar
Sri lanka tea
By Kathirpriya
அண்மையில் மியான்மரில் மோச்சா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிற்கு சிறிலங்காவினால் ஒரு மெட்ரிக் தொன் தேயிலை நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்திற்கான நிகழ்ச்சி இன்று (27) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உதவிக்கு நன்றி
சிறிலங்கா வெளியுறவு அமைச்சகத்தில் நிகழ்ந்த நிகழ்வில் கொழும்பில் உள்ள மியான்மார் தூதுவர் ஹான் து சிலோன் தேயிலை நன்கொடையை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இந்த உதவிக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்த மியான்மாரின் தூதுவர் ஹான் து, இந்நிகழ்வின் மூலம் இரு நாடுகளிற்கும் இடையிலான நட்புறவு மேலும் நீடிக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி