மின்சாரக் கட்டணத்தை குறைக்க மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்து
இலங்கையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம், 37 வீதத்தால் குறைக்கப்பட வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று(27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வசந்த சமரசிங்க, மக்களை ஏமாற்றும் வகையில் மிகவும் குறைந்த வீதத்தில் தற்போது மின் கட்டணத்தை குறைக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
இலங்கையில் மின் கட்டணத்தை திருத்த சிறிலங்கா மின்சார சபை மற்றும் பொதுப்பயன்பாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மின் கட்டணம்
இதற்கமைய, 3.34 வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க முடியுமென குறித்த தரப்பினரால் கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டவிரோதமாக இரண்டு தடவைகள் மின்சார கட்டணம் இலங்கையில் அதிகரிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா மின்சார சபையின் செலவு 96 பில்லியனால் குறைவடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த பின்னணியில், மின்கட்டணத்தை 37 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வசந்த சமரசிங்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |