வவுனியாவில் சுற்றிவளைக்கப்பட்ட வர்த்தக நிலையம்- சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!
By Kalaimathy
வவுனியா கோவில்குளம் பகுதியில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நடத்தப்பட்ட சோதனையில், அரிசி மற்றும் கோதுமை மா என்பன நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டது.
தற்போது சந்தையில் கோதுமை மாவின் விலை உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இந்நிலையிலேயே சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தியாவசியப் பொருட்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க அவசரகால விதிமுறைகள் பிரகடனப்படுத்தப்பட்டதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்தும் சோதனைகளை முன்னெடுத்து வருகிறது.
இதுவரையில் மேற்கொண்ட சோதனையில் 32,597 மெட்ரிக் டன் சீனி மற்றும் 643.5 மெட்ரிக் டன் நெல் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.