சிறிலங்கா கடற்பரப்பில் நங்கூரமிட்டுச் சென்ற Ever Ace தொடர்பில் சீனாவின் பெருமிதம்!
உலகின் மிகப்பெரிய Ever Ace ,Ever Green கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டது தொடர்பில் சீன தூதரகத்தின் ருவிட்டர் பதிவு ஒன்றை பிரசுரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான Ever Aceஐ வரவேற்ற இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் China Merchants Port Holdings க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் வந்து நங்கூரமிட்ட பகுதி முக்கியமாக சீனா மெர்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மூலம் இயக்கப்படும், (CICT) தெற்காசியாவின் ஒரே ஆழமான நீர் முனையமாகும். இதனால் கொழும்பு துறைமுகம் மிகப்பெரிய கப்பல்களைக் கையாளும் திறன் கொண்டது.
China Merchants Port Holdings நிறுவனம் தொடர்ந்து 4 ஆண்டுகளாக சிறந்த கண்டெய்னர் முனையமாக AFLAS தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1,600 ஊழியர்கள் பணிபுரிகின்றதோடு, 98% இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். அனைத்து கொள்கலன் பாரம் தூக்கிகளும் மின்சாரம் மூலமாகவே செயற்படுகின்றன.
China Merchants Port Holdings இல் கார்பன் புகை வெளியேற்றம் மொத்தமாக 40% குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையம் சீனாவின் China Merchants Port Holdings (CICT) இனால் நிர்வகிக்கப்படுகின்றது.
