எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையால் கைது
arrest
srilanka fisherman
india navy
By Sumithiran
இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட 2 மீனவர்களையும் அவர்கள் சென்ற நாட்டுப்படகுடன் இந்திய கடற்படையினர் நாகப்பட்டினம் கடற்கரை முகாமுக்கு அழைத்து வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் காரைநகர் கோவளம் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகுடன் சிறிலங்கா கடற்படையின் படகு மோதி அதில் ஒரு மீனவர் உயிரிழந்ததுடன் ஏனைய இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்ட பின்னணியில் இலங்கை மீனவர்களின் கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.