தனித்து போட்டியிடவும் தயார்! மைத்திரி பகிரங்க சவால்
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்விலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது - எமக்கு கிடைக்கவேண்டிய நியாயமான ஆசனங்கள் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளோம்.
எமக்கு அது கிடைத்தால் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தனியாக போட்டியிட எமது கட்சி முடிவெடுக்கும்.
இரண்டிற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.
2020 ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு செய்யும் போது எமது கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டது.
எமது கட்சிக்கு களுத்துறை மற்றும் நுவரெலியாவுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை.
கம்பஹாவிற்கு ஒன்று கிடைத்தது. குருணாகலைக்கு இரண்டு கிடைத்தது. எமது நியாயமான வேட்பாளர்கள் கிடைக்கவில்லை.
நாம் 30 வேட்பாளர்களை கோரினோம். எனினும் கிடைக்கவில்லை. இல்லையென்றால் நாம் 30 பேர் நாடாளுமன்றம் சென்றிருப்போம் என்றார்.
Tags : #Srilanka Freedom Party #Maithripala Sirisena #Election