தனித்து களமிறங்கி அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளமாட்டோம் - சுதந்திரக்கட்சி அறிவிப்பு
srilanka
freedom
By Vasanth
அரசாங்கத்தை சங்கடத்திற்கு உள்ளாக்குவதற்கோ மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுடன் இணைந்து பொதுமக்களின் வெற்றிக்காக செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி