அதிகபட்ச சில்லறை விலையை மீறும் வர்த்தகர்கள் தொடர்பில் அமைச்சரவையின் புதிய தீர்மானம்!
cabinet
sri Lanka
lasantha alakiyawanna
bandhula gunawarthana
essentials
By Kalaimathy
தனியார் எரிவாயு நிறுவனங்கள் தங்கள் விநியோக நடவடிக்கையை நிறுத்தியமை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அதேவேளை அதிகபட்ச சில்லறை விலையை மீறி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் 2,500 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வௌியிடப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி