நாங்கள் வெற்றி கொள்வோம் - செஹான் சேமசிங்க சவால்
வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ளும் என்று இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் திட்டங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒரு சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அவை திருத்தப்பட்டுள்ளது.
கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு கடந்த ஒரு மாத காலமாக நாடு தழுவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளது என்பதற்காக சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் தளர்த்தப்படவில்லை. கடுமையான முறையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் பயணத் தடை தளர்த்தப்படும் காலங்களில் செயற்படுத்தப்படும். கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,