நெருக்கடியில் இலங்கை! முக்கிய அமைச்சர் ரணிலுடன் பேச்சு

srilanka covid19 corona ranil
By S P Thas May 14, 2021 08:17 AM GMT
Report
Courtesy: virakesari

அனுபவமிக்க தலைவர்களின் ஆலோசனைகள் இன்றியமையாதது என ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு கலந்துரையாடியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தற்போதைய அரசின் அமைச்சர் ஒருவர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் ரணிலுடன் அந்த அமைச்சர் பேசியவை வருமாறு, சுகாதார பிரிவுகளை மாத்திரமல்ல அமைச்சரவையையும் புறம்தள்ளிய நிலையே காணப்படுகின்றது. ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என்பது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். அனுபவமிக்க தலைவர்களின் ஆலோசனைகள் இன்றியமையாதது. கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டிற்கான அறிவிப்புகளை வெளியிட்டு கடமைகளை செய்து வருகின்றேன்.

அதேபோன்று அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் நீங்களும் முடியுமானவரை மக்களின் சுகாதார நலன்களை சிந்தித்து செயற்படுமாறு குறித்த அமைச்சருக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, நாடும் மக்களும் இருந்தால் தான் அனைவருக்கும் அரசியலில் ஈடுப்பட முடியும் என்று பதில் வழங்கியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் கட்சி உறுப்பினர்களுடன் இணையம் ஊடாக நேற்று கலந்துரையாடிய ரணில் விக்ரமசிங்க, பொது மக்கள் பாதூப்பு சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதால் மாத்திரமே இலங்கையை சட்டரீதியாக முடக்க இயலும் எனவும் குறிப்பிட்டார். நாடு தற்போது முழு முடக்கத்தில் உள்ளதா ? இல்லையா ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

தேசிய அடையாள அட்டையின் எண்களின் அடிப்படையில் வெளியில் வரலாம் என பொலிஸ் பேச்சாளர் அறிவிக்கையில், இல்லை எதிர்வரும் திங்கட்கிழமை வரை நாடு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறுவதாக இதன் போது வஜிர அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் பரவலுக்குள் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியில் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவசரமாக வெளிநாடு சென்றமை ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் ஒரு பகுதியாகவே அமைவதாக சந்தித் சமரசிங்க இதன் போது குறிப்பிட்டார்.

1870 களில் பிரித்தானிய மன்னாரட்சியில் கொண்டுவரப்பட்ட தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தொற்று தடுப்பு விதிகளையே தற்போதைய அரசாங்கம் கையாள்கின்றது. இந்த விதியினை 1930 களில் மலேரியா தொற்று ஏற்பட்ட போதே பிரித்தானியர் மறுசீரமைத்து விட்டனர். இந்த சட்டத்தின் பிரகாரம் நாட்டை முடக்க இயலாது.

பொது மக்கள் பாதூப்பு சட்டத்தின் கீழ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதால் மாத்திரமே இலங்கையை சட்டரீதியாக முடக்க இயலும். மறுப்புறம் இலங்கை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிக்கும் எதிர்வு கூறல்கள் மிக ஆபத்தானதாகும்.

அதாவது இம் மாதம் இறுதியில் கொரோனா அச்சுறுத்தல் மிக்க நாடுகளின் சிவப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்படலாம் என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. எனவே தான் எமது நாட்டில் உள்ள வெளிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர் என இந்த கலந்துரையாலின் போது ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்தார்.

கொவிட் வைரஸை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை உருவாக்குதல், ஐ.டி.எச் வைத்தியசாலையின் கட்டிட நிர்மானம், இயற்கை சுவாசக்கருவிகள் கொள்வனவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டில்கள் கொள்வனவு குறித்து ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்திய போது அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை. தற்போது நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக பிரதி தலைவர் ருவன் விஜேவர்தண தெரிவித்தார்.

இந்தியாவில் தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோயும் பரவுகின்றது. கவனம் குறைவாக செயற்பட்டால் இலங்கைகையும் இந்த நோய் தாக்கும். தொற்று நோய் ஆய்வு கூடமொன்று உருவாக்குமாறு கூறியும் அதனை அரசாங்கம் பொருட்படுத்த வில்லை. வெறும் கட்டில்களை தயாரித்தால் மாத்திரம் போதாது மாறாக விசேட வைத்திய சேவையாளர்களும் அவசியம் என இதன் போது ஆசு மாரசிங்க குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் சில தீர்மானங்களினால் பொலிஸ் அதிகாரிகளும் நெருக்கடிக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. நாடு முடக்கப்பட்ட விதம் சட்டரீதியானதல்ல என பாலித ரங்கே பண்டார கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு குறிப்பிட்டார்.

கொவிட் தடுப்பூசிகளை இரு முறைபெற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சிசேல்ஷ் போன்ற நாடுகளில் கொரொனா தொற்று மீண்டும் தீவிரம் கண்டுள்ளது. தீவுகள் சிலவும் முடக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் தலைவர்கள் சிந்தித்து செயற்படாவின் நாடு படுமோசமான நிலைமையை எதிர்கொள்ளும். அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வை கூட்டி துறைமுக நகர் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. அந்த சட்டமூலத்தை எப்போது வேண்டுமெனாலும் நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் கொவிட் விடயத்தில் அரசாங்கம் காலம் கடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் மக்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படுகின்றது என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

நன்றி - வீரகேசரி

ReeCha
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025